செய்திகள்
திமுக

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் முப்பெரும் விழா

Published On 2020-08-28 08:12 IST   |   Update On 2020-08-28 08:12:00 IST
தி.மு.க.வின் முப்பெரும் விழா செப்டம்பர் 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
சென்னை:

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

2020-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவினையொட்டி ஆண்டுதோறும் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பெரியார் விருது மா.மீனாட்சி சுந்தரத்துக்கும், அண்ணா விருது அ.ராமசாமிக்கும், கலைஞர் விருது எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கும், பாவேந்தர் விருது அ.தமிழரசிக்கும், பேராசிரியர் விருது சுப.ராஜகோபாலுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News