செய்திகள்
கோப்புபடம்

சென்னிமலை அருகே கியாஸ் பங்க் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2020-08-27 15:27 IST   |   Update On 2020-08-27 15:27:00 IST
சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் கியாஸ் பங்க் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் கியாஸ் பங்க் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, பி.ஆர்.எஸ். ரோடு, பூங்கா நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்புக்கு அருகில் தனியார் இடத்தில் கியாஸ் பங்க் அமைக்க பணிகள் நடக்கிறது.

இந்த இடத்தில் கியாஸ் பங்க் அமைந்தால் சுற்றிவசிக்கும் மக்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை ஏற்படும். மேலும் அந்த இடத்தில் அதிக அளவில் விசைத்தறி பட்டறைகள் இருப்பதால் பாதிக்கப்படும். இதனால் அந்த இடத்தில் கியாஸ் பங்க் வைக்க அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Similar News