செய்திகள்
கோப்புபடம்

அந்தியூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2020-08-27 14:59 IST   |   Update On 2020-08-27 14:59:00 IST
அந்தியூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தியூர்:

அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில், வட்டார சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டார செயலாளருமான சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில வட்டார பொருளாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் தேவராஜ், துணை செயலாளர் மகேந்திரன், ஊராட்சி செயலர்கள் மணிமுத்து, பெரியசாமி, எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Similar News