செய்திகள்
சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஒரேநாளில் 56 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 129 பேர் கொரோனா தொற்றுடன்சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 25 பேர் நேற்று வீடு திரும்பினர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 484 ஆக இருந்தது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 58 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 955 பேர் வீடு திரும்பி உள்ளனர்.