செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

கட்டிட பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2020-08-21 15:24 IST   |   Update On 2020-08-21 15:24:00 IST
வில்லியனூர் அருகே கட்டிட பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள உறுவையாறு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் என்கிற வடிவேலு (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சென்டரிங் வேலை செய்து வந்தார்.

அந்த வீட்டின் மேலே உயர்அழுத்த மின்கம்பி சென்றுள்ளது. அப்போது உரிய பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்த வெற்றிவேல், எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் நேற்று பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News