செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

சொகுசு படகுகள் வாங்கியதில் முறைகேடு: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை- கவர்னர் பரிந்துரை

Published On 2020-08-09 23:21 GMT   |   Update On 2020-08-09 23:21 GMT
சொகுசு படகுகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்த கவர்னர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு சென்றுவர படகுகள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பெருகி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் படகுகள் வாங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது சுமார் ரூ.2 கோடி செலவில் 2 சொகுசு படகுகள் வாங்கப்பட்டன. இந்தப் படகுகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கவர்னர் கிரண்பேடிக்கும் பல்வேறு புகார்கள் சென்றன.

இந்த புகார்கள் தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்த கவர்னர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.
Tags:    

Similar News