செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருமானூர் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் இடித்து நாசம் செய்தனர். அது தொடர்பாக அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமானூர் போலீஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் அளித்திருந்தனர்.
ஆனால் இதுவரை காவல்துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று திருமானூர் பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் சாமிதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.