செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-29 07:30 GMT   |   Update On 2020-07-29 07:30 GMT
புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,171 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் புதுச்சேரியில் 154 பேரும், காரைக்காலில் 12 பேரும் அடங்குவர்.

மாநிலத்தில் நோய்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,869 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 47 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநில மக்கள் சமூக இடைவேளி கடைபிடிக்குமாறும் மற்றும் முககவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
Tags:    

Similar News