செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கை மீறியதாக 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கை மீறியதாக மொத்தம் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர்களையும் கைது செய்தனர். மொத்தம் 617 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் உள்பட அபராதம் விதித்த வகையில் மொத்தம் ரூ.11 ஆயிரத்து 380 வசூலிக்கப்பட்டது.