செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி சட்டசபை மேலும் 2 நாள்களுக்கு மூடல்

Published On 2020-07-28 08:46 GMT   |   Update On 2020-07-28 08:46 GMT
புதுச்சேரி சட்டசபை மேலும் 2 நாள்களுக்கு மூடப்படுவதாக சட்டசபை செயலர் முனுசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியான நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. உதவியாளர், சட்டசபை காவலர்கள் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், புதுச்சேரி சட்டசபை மேலும் 2 நாள்களுக்கு மூடப்படுவதாக சட்டசபை செயலர் முனுசாமி அறிவித்துள்ளார்.

இதையடுத்து புதுச்சேரி சட்டசபை வளாகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


Tags:    

Similar News