செய்திகள்
கோப்புபடம்

ஆதனக்கோட்டை அருகே பெண்ணிடம் 4 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

Published On 2020-07-23 16:13 IST   |   Update On 2020-07-23 16:13:00 IST
ஆதனக்கோட்டை அருகே பெண்ணிடம் 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆதனக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி தினேஷ். இவரது மனைவி ரேவதி (வயது 27). தினேஷ் தனது குடும்பத்தினருடன் ஆதனக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மாமியார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ரேவதியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ரேவதி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News