செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் வார்டு வாரியாக கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-07-20 08:50 GMT   |   Update On 2020-07-20 08:50 GMT
வேலூர் மாநகராட்சி பகுதியில் வார்டு வாரியாக கொரோனா பரிசோதனை முகாம் இன்று முதல் 6 நாட்கள் நடைபெறுகிறது
வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை 60 வார்டுகளிலும் முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த நிலையில் 2-வது கட்டமாக இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 10 வார்டுகள் வீதம் 6 நாட்களுக்கு 60 வார்டுகளிலும் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் அந்தப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப்படும் நபர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல்நலக்குறைவு உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News