செய்திகள்
முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-07-19 12:33 IST   |   Update On 2020-07-19 12:33:00 IST
அரியலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா அறிவுறுத்தலின் பேரில், தேளூர்- ரெட்டிப்பாளையம் பகுதியில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.50 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு இலவசமாக ஊராட்சி சார்பில் முககவசம் வழங்கப்பட்டது.

மேலும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிற்கு சென்றவுடன் கைகளை சுத்தமாக சோப்புபோட்டு கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்நாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். 

Similar News