செய்திகள்
மருத்துவ முகாம்

கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2020-06-30 19:54 IST   |   Update On 2020-06-30 19:54:00 IST
கூடுவாஞ்சேரி பகுதியில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து கொண்டனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் இதுவரை 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து பேரூராட்சி சார்பில் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி ஜெயலட்சுமி நகர் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து கொண்டனர்.

சிறப்பு நிலை கண்காணிப்பு அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆர்.ராஜா முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவருடன் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரவிக்குமார் உடன் இருந்தார்.

Similar News