செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

Published On 2020-06-27 10:32 IST   |   Update On 2020-06-27 10:32:00 IST
செங்கல்பட்டு அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம், கோகுலபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் குடும்பத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீடு  சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டது. வீட்டின் முன்பகுதியில், கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பழனியின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றுவிட்டனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Similar News