செய்திகள்
முருகன்

12-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

Published On 2020-06-13 07:43 GMT   |   Update On 2020-06-13 07:43 GMT
வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி 12-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக அவர்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முருகன் உறவினர்களிடம் அவ்வாறு பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது மனைவி நளினியிடம் பேசவும் சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று அவர் 12-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகன் மிகவும் சோர்வடைந்து காணப்படுகிறார். அவரின் உடல்நிலை மோசமானால் உடனடியாக மீண்டும் குளுக்கோஸ் ஏற்றப்படும். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News