செய்திகள்
கடலூர் நகரில் 72 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
கடலூர் நகரில் 72 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் இயக்கி வைத்தார்.
கடலூர்:
கடலூர் நகரில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கும் வகையிலும் போலீசார் கடலூர் நகரில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வின் அறிவுரையின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஆகாசமூர்த்தி, தினசரி பத்திரிகை நிறுவனம் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து நிதி திரட்டி சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் கடலூர் பஸ் நிலையம், முதுநகர் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என நகரில் 72 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதில் ‘தினத்தந்தி’ சார்பில் 3 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலந்து கொண்டு, கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் துரைராஜ், சிப்காட் திட்ட அலுவலர் தமிழ்செல்வி, எழில்அரசன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.