செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கு உத்தரவை மீறி திருவிழா நடத்திய 10 பேர் மீது வழக்கு

Published On 2020-06-09 12:17 IST   |   Update On 2020-06-09 12:17:00 IST
சிதம்பரம் அண்ணாமலை நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி திருவிழா நடத்திய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்துக்கு இளம்திரைமேடு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஊரடங்கு உத்தரவை மீறி தீ மிதி திருவிழா நடைபெறுவதாக தகவல் வந்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு அனுமதியின்றி திருவிழா நடத்தியவர்களிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

பின்னர் ஊரடங்கு உத்தரவு இருக்கும் போது திருவிழா நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதையடுத்து கோவில் திருவிழா நடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News