செய்திகள்
கைது

400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2020-06-08 16:15 IST   |   Update On 2020-06-08 16:15:00 IST
சரக்கு ஆட்டோ மற்றும் அதில் இருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்ட எல்லையான சுகந்திரபுரம் சோதனைச்சாவடி அருகே கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து புதுவயல் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தை(வயது 28) போலீசார் கைது செய்து, சரக்கு ஆட்டோ மற்றும் அதில் இருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர் ஆனந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Similar News