செய்திகள்
ஆர்ப்பாட்டம்

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-05-30 14:00 GMT   |   Update On 2020-05-30 14:00 GMT
ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேத்தூர் பஸ் நிறுத்தம் முன்பு சங்க தலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தளவாய்புரம்:

ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேத்தூர் பஸ் நிறுத்தம் முன்பு சங்க தலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் நிவாரணமாக ரூ.7,500 வழங்க வேண்டும். ஊரடங்கு நேரத்தில் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது. இன்சூரன்ஸ் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் செயலாளர் லட்சுமண குமார், வக்கீல் பகத்சிங், வீராச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வத்திராயிருப்பு பட்டாளம்மன் பஜாரில் ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்களின் பெயர் விவரங்களை போலீசார் கேட்டனர். இதனால் போலீசாருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News