செய்திகள்
புகார்

வேலூர் அருகே தொழிலாளி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்

Published On 2020-05-22 17:09 IST   |   Update On 2020-05-22 17:09:00 IST
வேலூர் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

வேலூர் அருகே உள்ள பாலமதி செட்டேரி மலை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 43) கூலி தொழிலாளி.

கடந்த மாதம் 29-ந் தேதி அவரது நண்பர்கள் 2 பேர் பழனியை வீட்டிலிருந்து அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்கள் பழனியை சில மணி நேரம் கழித்து வீட்டில் விட்டுச் சென்றனர். அதற்கு பிறகு உடல் சோர்ந்து காணப்பட்ட பழனி கடந்த 3-ந்தேதி இறந்தார்.

அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் உடலை புதைத்தனர்.

இந்த நிலையில் பழனியின் மனைவி ராதா பாகாயம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். அதில் எனது கணவர் பழனியை அவரது நண்பர்கள் 2 பேர் கடந்த மாதம் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றபோது நன்றாக இருந்தார்.

அவர்கள் திரும்ப வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுச் சென்ற போது எனது கணவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அன்று முதல் சோர்வாக காணப்பட்ட அவர் சில நாட்களிலேயே இறந்துவிட்டார்.

இதனால் எனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து புதைக்கப்பட்ட பழனியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் பழனியின் நண்பர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News