செய்திகள்
பலி

புவனகிரி அருகே வாலிபர் சுருண்டு விழுந்து பலி

Published On 2020-05-17 22:57 IST   |   Update On 2020-05-17 22:57:00 IST
புவனகிரி அருகே வாலிபர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புவனகிரி:

புவனகிரி அருகே பு.சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 38). இவர் நேற்று மதியம் திடீரென்று சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் தணிகாசலம், மயங்கி கிடந்த கொளஞ்சியை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கொளஞ்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது தொடர்பாக புவனகிரி போலீசார் விசாரிக்கிறார்கள்.

Similar News