செய்திகள்
மட்டன் பிரியாணி

வேலூரில் மட்டன் பிரியாணி விலை உயர்ந்தது

Published On 2020-05-12 16:33 IST   |   Update On 2020-05-12 16:33:00 IST
இறைச்சி விலை அதிகரிப்பால் வேலூரில் மட்டன் பிரியாணி வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
வேலூர்:

வேலூரில் பிரியாணி கடைகள் அதிகளவில் உள்ளன. விடுமுறை நாட்களில் பிரியாணி கடைகளில் கூட்டம் அலை மோதும். ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பிரியாணி கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இங்கு மட்டன் பிரியாணி வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வழக்கமாக மட்டன் பிரியாணிரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனையாகும். 

தற்போது ரூ.170 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றி பிரியாணி கடைக்காரர்கள் கூறுகையில் ஊரடங்கு காரணமாக மட்டன் இறைச்சி கிலோ ரூ.600 லிருந்து ரூ800 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மட்டன் பிரியாணி விலையை உயர்த்தி உள்ளோம் என்றனர். 

Similar News