வேலூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து வந்த மேலும் 85 பேருக்கு கொரோனா சோதனை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதற்காக மாவட்ட எல்லைகளில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு அவர்கள் தனிமை படுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்து 525 பேர் வந்துள்ளனர். இதில் 5,440 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.
இவர்களில் சென்னையிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து வந்த 85 பேர் ரத்தம் சளி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.