செய்திகள்
கொரோனாவில் இருந்து மீண்ட வாணியம்பாடி பெண் இன்ஸ்பெக்டர்
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி பெண் இன்ஸ்பெக்டர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருடன் பணியாற்றி வந்த ஆண், பெண் போலீசார் உள்பட 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்ஸ்பெக்டர் குணமடைந்தார். அவர் உள்பட மேலும் 2 பேர் வேலூர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். அவர்களை மருத்துவக் கல்லூரி டீன் செல்வி, கண்காணிப்பாளர் ராஜவேலு உள்ளிட்டோர் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.
குணமடைந்து வீடு திரும்பிய பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.