செய்திகள்
கோப்பு படம்

பா.ஜனதா அரசை கண்டித்து 50 இடத்தில் தர்ணா போராட்டம் - இந்திய கம்யூனிஸ்டு முடிவு

Published On 2020-05-09 09:11 GMT   |   Update On 2020-05-09 09:11 GMT
புதுவைக்கு நிதி வழங்காத பா.ஜனதா அரசை கண்டித்து 50 இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில நிர்வாகக்கழு கூட்டம் பொருளாளர் சுப்பையா தலைமையில் நடந்தது.மாநில செயலாளர் சலீம் பணிகள் குறித்த அறிக்கை சமர்பித்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலை நாதன், நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம், சரளா, தனராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், புதுவைக்கு நிதி வழங்காமல் ஏமாற்றும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், புதுவையில் ரே‌ஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்க வலியுறுத்தியும் வருகிற 12-ந் தேதி மாநிலம் முழுவதும் 50 இடங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஊரடங்கு விலக்கப்படும் வரை புதுவையில் மதுக் கடை களை திறக்க அரசு அனுமதிக்க கூடாது. கொரோனா நிவாரணமாக புதுவையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
Tags:    

Similar News