செய்திகள்
விபத்து பலி

ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த முதியவர் பலி

Published On 2020-05-09 14:16 IST   |   Update On 2020-05-09 14:16:00 IST
ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த முதியவர் பலியானர்.

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை அடுத்த மரியாள் நகரை சேர்ந்தவர் சந்திர சேகர் (வயது75). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளிள் கம்பன் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் முந்தி செல்ல முயன்றது.

இதனால் சந்திரசேகர் திடீர்ரென பிரேக் போட்டார். இதில் அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். விபத்தில் வயிற்றில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து சந்திரசேகரின் மருமகன் கிருஷ்ண மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News