செய்திகள்
லாரி டிரைவருக்கு கொரோனா பாதிப்பு- க.குச்சிப்பாளையம் கிராமம் சீல் வைப்பு
திருபுவனை அருகே க.குச்சிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா உறுதியானதால் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது.
திருபுவனை:
திருபுவனை அருகே க.குச்சிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றி இறக்கி விட்டு புதுவை திரும்பினார்.
கோரிமேடு எல்லையில் மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்தனர். அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
இந்த நிலையில் மருத்துவ குழுவினரின் பரிசோதனையில் அந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று அவரை சிகிச்சைக்காக கதிர்காமத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்துள்ளனர்.
லாரி டிரைவருக்கு கொரோனா உறுதியானதால் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. பிற பகுதியை சேர்ந்த மக்கள் க. குச்சிப்பாளையத்துக்கும் மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே செல்லாதபடியும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே லாரி டிரைவரால் அவரது தாய் மற்றும் மனைவி, குழந்தைகளுக்கு கொரோனா பரவி இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களை இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் லாரி டிரைவர் பல இடங்களுக்கு சென்று வந்ததால் கொரோனா பலருக்கும் பரவி இருக்கலாம் என கருதி அவர் எங்கெங்கு சென்றார், யார்-யாருடன் பழகினார் என்ற விவரங்களை வருவாய் துறையினரும், போலீசாரும் சேகரித்து வருகிறார்கள்.