செய்திகள்
வில்லியனூர் அருகே மது கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தற்கொலை
வில்லியனூர் அருகே மது கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே சேந்தநத்தம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தமிழரசன் (வயது 29) கூலித்தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. பவித்ரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே தமிழரசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர் மது குடித்தால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும் என்ற நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவினால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுகுடிக்க முடியாமல் தமிழரசன் திண்டாடி வந்தார்.
இதற்கிடையே அவரது மனைவி பவித்ராவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஏற்கனவே மது கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த தமிழரசன் தற்போது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்தார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் நேற்று அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்துவிட்டார். பின்னர் தனது பெற்றோரிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக தமிழரசனை மீட்டு கூடப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே தமிழரசன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு விஷ்ணு பிரதாபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.