செய்திகள்
கலெக்டர் அருண்

புதுவையில் 68 தொழிற்சாலைகளுக்கு அனுமதி- கலெக்டர் அருண் தகவல்

Published On 2020-04-30 15:31 IST   |   Update On 2020-04-30 15:31:00 IST
புதுவையில் 68 தொழிற்சாலைகளை இயக்க அனுமதி வழங்கி உள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிகோரி 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளது. 68 தொழிற்சாலைகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளோம். மற்ற தொழிற்சாலைகள் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம். புதுவையில் கடைகளை திறக்க அனுமதியளிக்க முடிவு செய்துள்ளோம். புதுவை, உழவர்கரை நகராட்சியில் ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆணையர்கள் இதனை பரிசீலித்து கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து அனுமதி கொடுப்பார். கிராமப்புறங்களில் பாகூர், வில்லியனூர் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்கள் தலைமையில் துணை கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் எஸ்.ஐ, தாசில்தார், தொழிலாளர் துறை ஆய்வாளர் இடம்பெற்றுள்ளனர்.

எலக்ட்ரீஷியன், பிளம்பர், கட்டுமான தொழிலாளர்கள் வேறு எங்காவது வேலை செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது. கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம், சானிடைசர் கட்டாயம் கடைகளில் வைத்திருக்க வேண்டும். மாநில எல்லை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News