செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

மதுபானக்கடை உரிமையாளர்களுக்கு புதுவை அரசு மீண்டும் நெருக்கடி

Published On 2020-04-30 15:22 IST   |   Update On 2020-04-30 15:22:00 IST
மதுபான விற்பனை உரிமம் பெற்றவர்கள் விற்பனை கணக்கை பின்பற்றவும், 2018-19, 2019-20-ம் ஆண்டுகளுக்கான ஆண்டு விற்பனை கணக்கை கலால் துறையிடம் ஒப்படைக்கவும் புதுவை அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் ஊரடங்கால் மதுபான கடைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.

இதனால் மதுபான உற்பத்தியாளர்கள், உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், பார்களில் வேலை செய்வோர் என ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் கலால்துறையினர் மதுபான கடைகளுக்கு சீல் வைக்கவில்லை. இதனால் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தது.

இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மதுபான கடைகளின் இருப்பும் கணக்கிடப்பட்டது. இதனால் மதுபான விற்பனையாளர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்தனர். பல மதுபான கடை உரிமையாளர்கள் உடனடியாக கணக்கு காட்ட முடியவில்லை. இருப்பினும் இருப்பை சரிவர காட்டாத மதுபான கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுவை அரசு மதுபானக்கடை உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒரு நெருக்கடியை அளித்துள்ளது. இது தொடர்பாக கலால்துறை இணை ஆணையர் சஷ்வத்சவ்ரவ் வெளியிட்டுள்ள உத்தரவில், மதுபான விற்பனை உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை கணக்கை பின்பற்ற வேண்டும். மேலும் 2018-19, 2019-20-ம் ஆண்டுகளுக்கான ஆண்டு விற்பனை கணக்கை உடனடியாக கலால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கணக்குகளை ஒப்படைக்க தவறினால் கலால்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனால் மதுபானகடை உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.


Similar News