செய்திகள்
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்த்தப்படுமா?- 2ம் தேதி முடிவு செய்கிறது அமைச்சரவை

Published On 2020-04-30 05:19 GMT   |   Update On 2020-04-30 05:19 GMT
புதுச்சேரியில் ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து 2ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடிவடைய இன்றும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ஊரடங்கு நிலவரம் மற்றும் மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை தளர்த்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ‘மக்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளதைப் போல, மக்களின் வாழ்வாதார அம்சங்கள் குறித்தும் அதிகம் கவலைப்படுகிறோம். மத்திய அரசு ஊரடங்கை தளர்த்துமா? அல்லது நீட்டிக்குமா? என்பது தெரியவில்லை. 

ஊரடங்கை நீட்டிப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து மாநில நிர்வாகம் இப்போது பரிசீலித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக மே 2 ம் தேதி அமைச்சரவை மீண்டும் கூடுகிறது’ என்றார்.

ஒட்டுமொத்தமாக ஊரடங்கை  நீட்டிப்பது சாத்தியம் இல்லை என்றும், ஊரடங்கை படிப்படியாக தளர்த்த அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News