செய்திகள்
அம்மா உணவகம்

அ.தி.முக. சார்பில் 7 அம்மா உணவகங்களில் இலவச உணவு

Published On 2020-04-23 16:13 IST   |   Update On 2020-04-23 16:13:00 IST
அரக்கோணம், ராணிப்பேட்டையில் அ.தி.முக. சார்பில் 7 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
அரக்கோணம்:

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா அவதியால் நிவாரண உதவிப்பணிகள் தொடர்ந்து தமிழக அரசால் சேவை மனப்பான்மை உள்ளவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

அரக்கோணம் அம்மா உணவகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஏப்ரல் 22-ந்தேதி வரை கட்டணமில்லா உணவு வழங்கி வந்தார்கள்.

இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்கி வேலூர் கிழக்கு மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், ஆற்காடு மற்றும் வேலூர் பகுதியில் காட்பாடியில் உள்ள அம்மா உணவகங்களில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக இன்று இரவு முதல் மே 3-ந்தேதி வரை கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News