செய்திகள்
அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் 30 ஆயிரம் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் வழங்கினார்

Published On 2020-04-22 07:04 GMT   |   Update On 2020-04-22 07:04 GMT
ஊரங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

சிவகாசி:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனனர்.

சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி சிரமப்படுகின்றனர். சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 30 ஆயிரம் பட்டாசு தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் முன்னிலை வகித்தார். பட்டாசு தொழிலாளர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உணவு பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்காக லாரிகளில் அரிசி பைகள் மொத்தமாக சிவகாசி ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்களை அலைய வைக்காமல் நேரிடையாக அவர்களின் வீடுகளுக்கே அரிசியை கொண்டு சேர்க்கும் வகையில் பட்டாசு ஆலை வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறுகையில் ஆவின்பாலினை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சப்-கலெக்டர் தினேஷ்குமார், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன்பஞ்சுராஜன், இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கண்ணன், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆசைதம்பி, மகேஸ்வரன், ராஜரத்தினம், செல்வராஜன், அபிரூபன், சங்கர், ஜெயராஜ், செல்வசண்முகம், பாஸ்கரராஜன், சீனிவாசன், திருமலைராஜன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பலராமன், சுப்பிரமணியன், கருப்பசாமி, நகர செயலாளர்கள் பொன் சக்திவேல்,  பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன், டி.எஸ்.பி., பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, கண்ணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News