செய்திகள்
திருவலம் பேரூராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்
திருவலம் பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்குகான கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
ஆற்காடு:
திருவலம் பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்குகான கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொ) அம்சா தலைமை தாங்கி முகாமினை கண்காணித்து துப்புரவு பணியாளர்களுக்கு பணியின் போது பாதுகாப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் துரை முன்னிலை வகித்தனர். இதனையடுத்து நடந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவர் அலுவலர் மருத்துவர் சங்கர் கணேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பேரூராட்சி அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர்.