செய்திகள்
கோப்புபடம்

வேலூரில் நெரிசலை தடுக்க நாளை முதல் மேலும் 5 இடங்களில் மார்க்கெட் கடைகள் செயல்படும்

Published On 2020-03-31 08:39 GMT   |   Update On 2020-03-31 08:39 GMT
வேலூர் மாநகரில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மார்க்கெட் விலையில் காய்கறிகள் கிடைக்க செய்யும் வகையில் மார்க்கெட் கடைகள் மேலும் 5 இடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் அதை தடுக்கும் வகையில் வேலூர் நேதாஜி மார்க்கெட் மூடப்பட்டது.

அதற்கு பதிலாக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு காய்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தொரப்பாடி அரசு பள்ளி மைதானம் காட்பாடி டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் உழவர் சந்தை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாநகரில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மார்க்கெட் விலையில் காய்கறிகள் கிடைக்க செய்யும் வகையில் மார்க்கெட் கடைகள் மேலும் 5 இடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று வேலூர் கோட்டை முன்பு அண்ணா சாலையில் இருபுறமும் காய்கறி கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் வைக்கப்பட்ட கடைகளில் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் மற்றும் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளி மைதானம் வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மைதானம் பாகாயம் சிஎம்சி மைதானம் ஆகிய இடங்களில் மார்க்கெட் காய்கறி கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர். நாளை அங்கு கடைகள் திறக்கப்பட்டு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News