செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-03-30 03:39 GMT   |   Update On 2020-03-30 03:39 GMT
கொரோனாவில் இருந்து பாதுகாக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கடத்தூர் :

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சி, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவரின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் டாக்டர் ஒருவர் பரிசோதனை செய்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புற பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அரசின் அறிவுப்புகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News