செய்திகள்
கொரோனா வைரஸ்

பெண் டாக்டருக்கு கொரோனா அறிகுறி- ஈரோடு ரெயில்வே ஆஸ்பத்திரி மூடல்

Published On 2020-03-28 10:28 GMT   |   Update On 2020-03-28 10:28 GMT
ஈரோட்டில் பெண் டாக்டருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு:

ஈரோடு ரெயில்வே காலனியில் ரெயில்வே மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டது.

அந்த பெண் டாக்டர் ஈரோடு ரெயில்வே ஆஸ்பத்திரியில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் பணி மாறுதல் பெற்று கோவை போத்தனூர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பிற டாக்டர்கள் நர்சுகள் மற்றும் பிற பணியாளர்கள் என 32 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் அவர்களின் குடும்பத்தினரையும் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ரெயில்வே ஆஸ்பத்திரி முழுமையாக மூடப்பட்டு உள்ளது. பெண் டாக்டருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சை அளித்தவர்கள் விவரம், அவர் சென்று வந்த இடங்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News