செய்திகள்
வேலூர் மாவட்டம்

வேலூருக்கு வந்த 12 முஸ்லிம் மதபோதகர்கள் ஆந்திராவுக்கு அனுப்பி வைப்பு

Published On 2020-03-27 06:23 GMT   |   Update On 2020-03-27 06:23 GMT
உத்தரபிரதேசத்தில் இருந்து வேலூருக்கு வந்த 12 முஸ்லிம் மதபோதகர்களை அதிகாரிகள் ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 12 முஸ்லிம் மதபோதகர்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி வேலூர் மாவட்டத்துக்கு வந்தனர்.

அவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று போதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்கள் வேலூர் முள்ளிப்பாளையத்தில் தங்கியிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 12 பேரும் அங்கிருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அறிகுறி காணப்பட்டவில்லை.

இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் சொந்த மாநிலத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். 12 பேரும் ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு செல்வதாக கூறினர்.

அதை தொடர்ந்து 12 பேரையும் நேற்று வேனில் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வரை அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆந்திர மாநில போலீசாரின் அனுமதி பெற்று கர்னூல் நோக்கி சென்றனர்.
Tags:    

Similar News