செய்திகள்
கைது

ஈரோட்டில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது

Published On 2020-03-24 10:54 GMT   |   Update On 2020-03-24 10:54 GMT
ஈரோட்டில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தகவல் பரப்புவோர் மீது போலீஸ் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் துக்கநாயக்கன் பாளையம் கிழக்கு மலை ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்த பூபாலன், இந்திரா வீதி கார்த்திகேயன் ஆகியோர் சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துக்கநாயக்கன் பாளையம் ஆரம்ப சுகதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து பூபாலன், கார்த்திகேயன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்துள்ளார்.

கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News