செய்திகள்
செயின் பறிப்பு

குடியாத்தத்தில் டி.எஸ்.பி. ஆபிஸ் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2020-03-18 12:05 GMT   |   Update On 2020-03-18 12:05 GMT
குடியாத்தத்தில் டி.எஸ்.பி. ஆபிஸ் அருகே பைக்கிள் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த செதுக்கரை விநாயகாபுரம் தெருவை சேர்ந்தவர் சந்திரன். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 51). நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் குடியாத்தம் டி.எஸ்.பி. ஆபிஸ் அருகே பைக்கில் கணவன், மனைவி வந்துகொண்டிருந்தனர். அப்போது பின்னாடி பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் பைக்கை விரட்டி சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இருட்டில் மறைந்து பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். டி.எஸ்.பி. அலுவலகம் அருகே நகை பறிப்பு சம்பவம் நடந்ததுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க இரவு முழுவதும் ரோந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News