செய்திகள்
குடியாத்தம் அருகே வாழைகளை நாசம் செய்த யானைகள்
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் வழைகளை நாசம் செய்தன.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் காட்பாடி வனச்சரக காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து கடந்த சில மாதங்களாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
குடியாத்தம் அருகே உள்ள கீழ் கொல்லப்பள்ளி கிராமத்திலுள்ள விவசாய நிலங்களுக்குள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 15 காட்டு யானைகள் புகுந்தன.
அங்கிருந்த மா வாழை மரங்களை பிடுங்கி வீசி நாசம் செய்தன.
இதனையடுத்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். நேற்று இரவு தனகொண்டபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்தன.
சங்கர் என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தன. வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.