செய்திகள்
லத்தேரி பஸ் நிலையம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
லத்தேரி பஸ் நிலையம் அருகே இன்று காலை லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள கோர பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் இவருடைய மகன் அருண் (வயது 20). மேல் விசாரத்தில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இன்று காலை லத்தேரி பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் அருண் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் முட்டைகள் ஏற்றி வந்த லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அருண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தால் காட்பாடி குடியாத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.