செய்திகள்
தனியார் குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்த போது எடுத்த படம்.

விளந்திடசமுத்திரத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட குடிநீர் ஆலைக்கு ‘சீல்’ -அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2020-03-02 23:24 IST   |   Update On 2020-03-02 23:24:00 IST
விளந்திடசமுத்திரத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தினமும் அளவுக்கு அதிகமான குடிநீர் நிலத்தடியில் இருந்து ராட்சச மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. இதனையடுத்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த குடிநீர் ஆலையால் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்படுகிறது என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் விளந்திடசமுத்திரத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் ஆலையை பொதுப் பணித்துறை நிலநீர் கோட்டம் தஞ்சை செயற்பொறியாளர் ராஜீவ் தலைமையில், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் ‘சீல்’ வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News