செய்திகள்
கம்யூனிஸ்டு கட்சி

பொன்னமராவதியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-20 14:05 GMT   |   Update On 2020-02-20 14:05 GMT
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் மத்திய அரசை கண்டித்தும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னமராவதி:

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் மத்திய அரசை கண்டித்தும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம். ஒன்றிய செயலாளர் பகுறுதீன், சிபிஐ ஒன்றிய பொருப்பாளர் பிரதாப்சிங் ஆகியோர் தலைமை வகித்தனர்.

 சிபிஎம் ராமசாமி, நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, சிபிஐ. மாநில குழு உறுப்பினர்கள் தர்மராஜன், ராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார், சாத்தையா, மாயழகு, சவுந்தர ராஜன், சிஐடியு தீன், ராஜா, ராசு, லெட்சுமி, திராவிடர் கழக ஒன்றிய தலைவர் ஆறுமுகம், மக்கள் பாதை இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதில் பட்ஜெட்டில் விவசாய கடன் ரத்து செய்யப்படாதது, உணவு உற்பத்திக்கு திட்டம் இல்லாதது, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படாதது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்காதது, ரெயில் வேயை தனியார் மயமாக்கும் திட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது, சேவை துறை மருத்துவம் போன்ற அத்தியாவசிய துறைகளில் தனியாரை அனுமதிக்கும் திட்டம், கல்வி பெற தடையாக இருக்கும் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட மோடி அரசின் மக்கள், தொழிலாளர், விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News