செய்திகள்
புளியமரத்தில் வேன் மோதி நிற்பதையும், ஆடுகள் இறந்து கிடப்பதையும் படத்தில் காணலாம்.

அறந்தாங்கி அருகே சரக்கு வேன் மரத்தில் மோதல்- 6 ஆடுகள் பலி

Published On 2020-02-19 21:54 IST   |   Update On 2020-02-19 21:54:00 IST
அறந்தாங்கி அருகே சரக்கு வேன் புளிய மரத்தில் மோதிய விபத்தில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பொன்னன் விடுதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. ஆட்டுவியாபாரி. இவர்அறந்தாங்கியில் நடக்கும் வாரச் சந்தைக்கு சரக்குவேனில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இவருடன் மருங்கா புரியைச் சேர்ந்த 5 பேர்இருந்தனர். வாகனத்தை பழனிச்சாமி ஓட்டினார்.

சரக்குவேன் அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை பகுதியில் வந்தபோது, மீமிசலில் இருந்து விராலி மலைக்கு வைக்கோல்கட்டுக்களை ஏற்றிச் சென்ற மற்றொரு சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி சாலையோரத்தில் இருந்த புளிமரத்தில் மோதியது. 

இதில் வேனில் இருந்த 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் சாமிக்கண்ணு உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News