செய்திகள்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த காட்சி

கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Published On 2020-02-09 18:18 GMT   |   Update On 2020-02-09 18:18 GMT
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசுகையில், புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, இலுப்பூர், விராலிமலை, குளத்தூர் போன்ற பல்வேறு தாலுகாவில் உள்ள கேபிள் டி.வி. சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் 70 ஆயிரத்து 771 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதுடன், 352 ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த புதிய டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லாமல் துல்லியமான ஒளிபரப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் முத்துகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News