செய்திகள்
லாரியை மறித்த யானைகள்

கரும்புக்காக லாரியை ‘சிறை’ பிடித்த யானைகள் - டிரைவர் இறங்கி தப்பி ஓட்டம்

Published On 2020-01-07 16:05 IST   |   Update On 2020-01-07 16:05:00 IST
சத்தியமங்கலம் அருகே கரும்புக்காக லாரியை சிறை பிடித்த யானைகளை கண்ட டிரைவர் தப்பி ஓடினர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட காரப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு வந்த இந்த லாரி காரப்பள்ளம் பகுதிக்கு வந்த போது திடீரென 2 யானைகள் ரோட்டுக்கு வந்தது. திடீரென லாரி முன் 2 யானைகள் வந்ததை கண்ட டிரைவர் வெலவெலத்து போனார்.

ஒரு யானை லாரியின் முன்னே நிற்க இன்னொரு யானை லாரியில் கரும்பு உள்ளதா? என மோப்பம் பிடித்தது.

கரும்பு லாரி என நினைத்து லாரியை 2 யானைகளும் மறித்ததை புரிந்து கொண்ட லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி குதித்து தப்பி ஓடிவிட்டார்.

சுமார் 30 நிமிடம் அந்த 2 யானைகளும் லாரியை சுற்றி.... சுற்றி வந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 30 நிமிடத்துக்கு பிறகு 2 யானைகளும் காட்டுக்குள் புகுந்தது. இதன் பிறகே போக்குவரத்து சீரானது.

இதை தொடர்ந்து லாரியை நிறுத்தி விட்டு சென்ற டிரைவரும் மீண்டும் வந்து லாரியை எடுத்து சென்றார்.

Similar News