செய்திகள்
சின்ன வெங்காயம்

பெரிய வெங்காயம் விலை குறைந்தது - சின்ன வெங்காயம் விலை எகிறியது

Published On 2020-01-07 10:31 GMT   |   Update On 2020-01-07 10:31 GMT
ஏட்டிக்கு போட்டியாக பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை எகிறியது.
ஈரோடு:

வரலாறு காணாத வகையில் சின்ன வெங்காயத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு பெரிய வெங்காயத்தின் விலை எகிறியது.

பெரிய வெங்காயத்தின் விலை ஈரோட்டில் அதிகபட்சமாக 150 ரூபாயை எட்டியது.

இந்த சமயத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120 ஆக இருந்தது. முதன் முறையாக சின்ன வெங்காயத்தை விட பெரிய வெங்காயத்தின் விலை ஏறியது.

இப்போது ஏட்டிக்கு போட்டியாக பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை எகிறியது.

பெரிய வெங்காயம் 1½ கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.

எப்படியே வெங்காயத்தின் விலை இன்னும் குறைந்த பாடில்லை.

மேலும் கத்தரிக்காய், பீட்ரூட், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளின் விலையும் அதிகமாகவே உள்ளது.

மேலும் முருங்கைக்காயை கண்ணில் கூட பார்க்க முடியவில்லை. ஒரு முருங்கைக்காய் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News