செய்திகள்
கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி ஈரோடு கல்லூரி மாணவர் பலி
கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி ஈரோடு கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இருவரும் இவரது நண்பர்கள் 3 பேரும் கொடுமுடி அருகே உள்ள காரணம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணை கரையோரமாக குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர் கார்த்திகேயன் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அவரது உறவினர்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். கொடுமுடி தீயணைப்பு வீரர்கள் வந்து மாணவரின் உடலை தேடி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பரிதாப சம்பம் குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.